அறத்தை போதித்து ஆத்திச்சூடி தந்து மேலும் தமிழ் வளர்க்க ஆயுள் வளர்க்கும் நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற தமிழ்பாட்டி ஒளவையாரின் பெயரை வைத்ததில் பெருமை கொள்கிறோம் .
தரமில்லாத சமையல் எண்ணெய்களை பயன்படுத்துவதால் எம்மக்களுக்கு ஏற்படும் உடல் பிணிகளை கண்டு மனம் வெதும்பி எம்மண்ணுக்கும் மக்களுக்கும் சமையல் எண்ணெய் சார்ந்து நேர்மையாகவும் உண்ஂமையாகவும் என்ன செய்யலாம் என யோசித்ததின் விளைவாக பிரசவித்த குழந்தைதான் ஒளவை மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்.